search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரமோத் சாவந்த்"

    கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முன்னர் உரிமை கோரிய நிலையில் புதிய முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசின் மீது சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. #GoanewCM #Goafloortest #PramodSawan
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த் இன்று காலை தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும்.

    முன்னாள் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்காக அரசின் சார்பில் 7 நாட்கள் துக்கம் கடைபிடிக்கும் நிலையில் எனக்கு வாழ்த்து கூறவும், மலர் மாலைகளுடன் வரவேற்பு அளிக்கவும் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #GoanewCM #Goafloortest  #PramodSawan
    மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.



    இதையடுத்து, கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் வீட்டில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
     
    இதற்கிடையே, பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்காக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    ×